காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில் அவள்)
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
(காலங்களில் அவள்)
பால்போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை - அவள்
கவிஞனாக்கினாள் என்னை
(காலங்களில் அவள்)
படம் : பாவ மன்னிப்பு
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்
Jul
7
Labels:
பாவ மன்னிப்பு
0 comments:
Post a Comment