நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------

பொன்மாலைப் பொழுது!
இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்!
(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்!
பாடும் பறவைகள் தாளமிடும்!
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!
ஒரு நாள் உலகம் நீதி பெறும்!
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்!
(இது ஒரு)

1 comments:

இந்தப் பாட்டை 1000000000000000000000000005 தடவையாக கேட்டாலும் அதே இளமை! இனிமை!

Post a Comment

Followers

Total Pageviews

Blog Archive