படம் : முள்ளும் மலரும்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் - கே ஜே ஏசுதாஸ்
இசை - இளையராஜா
வெளியான ஆண்டு : 1978
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
படம் : ராஜபார்வை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------------
ஆ:
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
(அந்தி)
பெ:
தேனில் வண்டு மூழ்கும்போது,....
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!
ஆ:
தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
(அந்தி)
ஆ:
தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!
பெ:
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!
(அந்தி)
பெ:
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
(அந்தி)
படம் : காதலர் தினம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வாலி
குரல் : உன்னி மேனன்
------------------------------------------------------
என்ன விலை அழகே?
என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல் மெளனமாகிறேன்.
(என்ன)
படைத்தான் இறைவன் உனையே!
மலைத்தான் உடனே அவனே!
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது, என் விழி சேர்ந்தது.
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீணை உன் மேனி, மீட்டட்டும் என் மேனி.
விரைவினில் வந்து கலந்திடு!
விரல் பட மெல்ல கனிந்திடு!
உடல் மட்டும் இங்கு கிடக்குது!
உடன் வந்து நீயும் உயிர் கொடு!
பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று! சிலையே!
(பல்லவன்)
உந்தன் அழகுக்கில்லை ஈடு!
(என்ன)
உயிரே உனையே நினைந்து,
விழிநீர் மழையில் நனைந்து,
இமையில் இருக்கும் இரவு உறக்கம்,
கண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு.
நிலவு எரிக்க, நினைவு கொதிக்க,
ஆராத நெஞ்சாச்சு, ஆகாரம் நஞ்சாச்சு.
தினம் தினம் உனை நினைக்கிறேன்,
துரும்பென உடல் இளைக்கிறேன்.
உயிர் கொண்டு வரும் பதுமையே!
உனைவிட இல்லை புதுமையே!
உன் புகழ் வையமும் சொல்ல,
சித்தன்ன வாசலில் உள்ள,
சித்திரம் வெட்குது மெல்ல! உயிரே!
(உன் புகழ்)
உனை நானும் சேரும் நாள் தான்!
(என்ன)
படம் : உயிரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி மேனன் & சுவர்ணலதா
-------------------------------------------------------------------
பெ:
ஓ!
கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை
ஆ:
பூங்காற்றிலே, உன் சுவாசத்தை,
தனியாகத் தேடிப் பார்த்தேன்.
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே,
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
உயிரின் துளி காயும் முன்னே,
என் விழி உனை காணும் கண்ணே!
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)
ஆ:
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா? நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)
பெ:
கண்ணில் ஒரு வலியிருந்தால்...கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை
ஆ:
வானம் எங்கும் உன் பிம்பம் - ஆனால்
கையில் சேரவில்லை - காற்றில்
எங்கும் உன் வாசம் - வெறும்
வாசம் வாழ்க்கையில்லை!
உயிரை வேரோடு கிள்ளி,
என்னைச் செந்தீயில் தள்ளி,
எங்கே சென்றாயோ கள்ளி,
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)
படம் : சிகரம்
இசை : S.P.பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------
அகரம் இப்போ சிகரம் ஆச்சு!
தகரம் இப்போ தங்கம் ஆச்சு!
காட்டு மூங்கில், பாட்டுப் பாடும்,
புல்லாங்குழல் ஆச்சு!
சங்கீதமே சந்நிதி....
சந்தோஷம் சொல்லும் சங்கதி!
(சங்கீதமே)
(அகரம்)
கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும், கரை ரெண்டும் வாழும்.
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய்யன்பு போகும், மெய்யன்பு வாழும்.
அன்புக்கு உருவமில்லை!
பாசத்தில் பருவமில்லை!
வானோடு முடிவுமில்லை!
வாழ்வோடு விடையுமில்லை!
இன்றென்பது உண்மையே.....
நம்பிக்கை உங்கள் கையிலே!
(அகரம்)
தண்ணீரில் மீன்கள் வாழும்.
கண்ணீரில் காதல் வாழும்.
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே!
பசியாற பார்வைபோதும்!
பரிமாற வார்த்தை போதும்!
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்!
தலைசாய்க்க இடமாயில்லை!
தலை கோத விரலாயில்லை!
இளங்காற்று வரவாயில்லை!
இளைப்பாறு பரவாயில்லை!
நம்பிக்கையே நல்லது.....
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!
(அகரம்)
படம் : மெளனராகம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------------
மன்றம் வந்த தென்றலுக்கு,
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே! என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்
(மன்றம்)
தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!
(மன்றம்)
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல,
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல!
ஓடையைப் போலே உறவும் அல்ல,
பாதைகள் மாறியே பயணம் செல்ல!
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!
(மன்றம்)
படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)
வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!
(கல்யாணமாலை)