படம் : முள்ளும் மலரும்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் - கே ஜே ஏசுதாஸ்
இசை - இளையராஜா
வெளியான ஆண்டு : 1978
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
படம் : ராஜபார்வை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------------
ஆ:
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
(அந்தி)
பெ:
தேனில் வண்டு மூழ்கும்போது,....
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!
ஆ:
தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
(அந்தி)
ஆ:
தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!
பெ:
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!
(அந்தி)
பெ:
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
(அந்தி)
படம் : மெளனராகம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------------
மன்றம் வந்த தென்றலுக்கு,
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே! என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்
(மன்றம்)
தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!
(மன்றம்)
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல,
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல!
ஓடையைப் போலே உறவும் அல்ல,
பாதைகள் மாறியே பயணம் செல்ல!
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!
(மன்றம்)
படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)
வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!
(கல்யாணமாலை)
படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------
பொன்மாலைப் பொழுது!
இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்!
(இது ஒரு)
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்!
பாடும் பறவைகள் தாளமிடும்!
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
(இது ஒரு)
வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!
ஒரு நாள் உலகம் நீதி பெறும்!
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்!
(இது ஒரு)
படம் : கடலோரக்கவிதைகள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : இளையராஜா & S.ஜானகி
பெ:
அடியாத்தாடி
அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?
அடியம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா?
ஆ:
உயிரோடு
பெ:
உறவாடும்
ஆ:
ஒரு கோடி ஆனந்தம்
பெ:
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆ:
ஆ....அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?அடியம்மாடி.....
பெ:
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
உன்னப்பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டி பாடாதோ?
ஆ:
இப்படி நான் ஆனதில்லை, புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை, மூக்கு நுனி வேர்த்ததில்லை
பெ:
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பாத்தாயோ?
எச கேட்டாயோ?
லலலலலா...லலலலலா...
ஆ:
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்?
பெ:
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன?
ஆ:
கட்டுத்தறி காளை நானே, கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!
(அடியாத்தாடி)