நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்
பாடல்: ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வைரமுத்து


ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)பாடல்: காலங்களில் அவள் வசந்தம்

குரல்: P B ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்


காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

(காலங்கலில் அவல்)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்
கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள்)


பாடல்: உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்

வரிகள்:


உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளிபச்ச மல பச்சத்துல மேயுதுன்னு சொன்னாங்கமேயுதுன்னு சொன்னதில நாயமென்ன கண்ணாத்தா
(உச்சி)


ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரோ ஆரீராரோஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டுல மாடுகட்டி பாலக் கறந்து வெச்சாபால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்கசொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல - அடிசின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
(உச்சி)


வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவகட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்ககட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத - அதசத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
(உச்சி)


பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்புசெங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்கசெங்கரையான் தின்னிருக்க நாயமில்ல - அடிசித்தகத்திப் பூவிழியே நம்பவில்ல
(உச்சி

படம் : முள்ளும் மலரும்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் - கே ஜே ஏசுதாஸ்
இசை - இளையராஜா
வெளியான ஆண்டு : 1978
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்


வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா


அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
படம் : ராஜபார்வை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------------

ஆ:
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
(அந்தி)

பெ:
தேனில் வண்டு மூழ்கும்போது,....
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!

ஆ:
தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
(அந்தி)

ஆ:
தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!

பெ:
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!
(அந்தி)

பெ:
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
(அந்தி)படம் : காதலர் தினம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வாலி
குரல் : உன்னி மேனன்
------------------------------------------------------
என்ன விலை அழகே?
என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல் மெளனமாகிறேன்.
(என்ன)

படைத்தான் இறைவன் உனையே!
மலைத்தான் உடனே அவனே!
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது, என் விழி சேர்ந்தது.
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீணை உன் மேனி, மீட்டட்டும் என் மேனி.
விரைவினில் வந்து கலந்திடு!
விரல் பட மெல்ல கனிந்திடு!
உடல் மட்டும் இங்கு கிடக்குது!
உடன் வந்து நீயும் உயிர் கொடு!
பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று! சிலையே!
(பல்லவன்)

உந்தன் அழகுக்கில்லை ஈடு!
(என்ன)

உயிரே உனையே நினைந்து,
விழிநீர் மழையில் நனைந்து,
இமையில் இருக்கும் இரவு உறக்கம்,
கண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு.
நிலவு எரிக்க, நினைவு கொதிக்க,
ஆராத நெஞ்சாச்சு, ஆகாரம் நஞ்சாச்சு.
தினம் தினம் உனை நினைக்கிறேன்,
துரும்பென உடல் இளைக்கிறேன்.
உயிர் கொண்டு வரும் பதுமையே!
உனைவிட இல்லை புதுமையே!
உன் புகழ் வையமும் சொல்ல,
சித்தன்ன வாசலில் உள்ள,
சித்திரம் வெட்குது மெல்ல! உயிரே!
(உன் புகழ்)

உனை நானும் சேரும் நாள் தான்!
(என்ன)படம் : உயிரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி மேனன் & சுவர்ணலதா
-------------------------------------------------------------------

பெ:

ஓ!
கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
பூங்காற்றிலே, உன் சுவாசத்தை,
தனியாகத் தேடிப் பார்த்தேன்.
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே,
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
உயிரின் துளி காயும் முன்னே,
என் விழி உனை காணும் கண்ணே!
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

ஆ:
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா? நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

பெ:
கண்ணில் ஒரு வலியிருந்தால்...கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
வானம் எங்கும் உன் பிம்பம் - ஆனால்
கையில் சேரவில்லை - காற்றில்
எங்கும் உன் வாசம் - வெறும்
வாசம் வாழ்க்கையில்லை!
உயிரை வேரோடு கிள்ளி,
என்னைச் செந்தீயில் தள்ளி,
எங்கே சென்றாயோ கள்ளி,
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

Followers