நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்

May
26



பாடல்: காலங்களில் அவள் வசந்தம்

குரல்: P B ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்


காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

(காலங்கலில் அவல்)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்
கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள்)

0 comments:

Post a Comment

Followers