நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்



கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ?
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ ?

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம் , இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் , கடவுளின் ரகசியம்

உலகே மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவா இனி மழை வரும் ஒசை ஆ ...

(காண காணும் காலங்கள் ...)

நனையாத காளுக்கேல்லாம் , கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ ...

(கனா காணும் காலங்கள் ...)

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்த்தி வேலை அழைக்கிரத எ
அதி காலை நேரம் எல்லாம் , தூங்காமல் விடிகிரதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

பட படைப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன் ?
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிக கொடுமை

(கனா காணும் காலங்கள் ...)

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

Blog Archive