நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்படம் : உயிரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி மேனன் & சுவர்ணலதா
-------------------------------------------------------------------

பெ:

ஓ!
கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
பூங்காற்றிலே, உன் சுவாசத்தை,
தனியாகத் தேடிப் பார்த்தேன்.
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே,
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
உயிரின் துளி காயும் முன்னே,
என் விழி உனை காணும் கண்ணே!
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

ஆ:
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா? நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

பெ:
கண்ணில் ஒரு வலியிருந்தால்...கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
வானம் எங்கும் உன் பிம்பம் - ஆனால்
கையில் சேரவில்லை - காற்றில்
எங்கும் உன் வாசம் - வெறும்
வாசம் வாழ்க்கையில்லை!
உயிரை வேரோடு கிள்ளி,
என்னைச் செந்தீயில் தள்ளி,
எங்கே சென்றாயோ கள்ளி,
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

1 comments:

யப்பா கணேஷூ என்னப்பா ஆச்சு. எனக்கு சிரிக்கனும் போல இருக்கு. ஒரு நல்ல நகைச்சுவையா எழுதி உடு ராசா.

Post a Comment

Followers

Total Pageviews

Blog Archive